முத்தமிழ்

விழா

மகதத்தின் மகத்தான வித்தகனாம் ஏகலைவன் வழி நிற்கும் அரசினர் பொறியியற் கல்லூரி, கோவை யின் கலைவித்தகர்களாம் தமிழ் மற்றும் நுண்கலை மன்ற ஏகலைவர்களின் ஓர் பெரும் பெருக்கு. தாயாகிய தமிழின் தாய்மையைப் பறைசாற்றும் வகையில் கலைகள் யாவும் புது ஒளி வீசி அரங்கேறும் மாபெரும் விழா "முத்தமிழ் விழா '23". ஒளியனைத்தும் திரிந்து வண்ணங்களைப் பரிசளிக்க, அவை நம் மனதோடு இணைந்து தவழ்ந்திடும் ஓர் வண்ணவிழாவாய் இவ்வாண்டு உருவெடுத்துள்ளது. பேச்சு, கவிதை, தனி நபர் நாடகம், தனி நபர் மௌனமொழி நாடகம் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகளும் நாடகம், மௌனமொழி நாடகம், நவீன நாடகம், தெருக்கூத்து, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பறை, சிலம்பம், பொம்மலாட்டம், ஒளி நாடகம் ஆகிய குழு நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மேலும் மெருகேற்றிப் பயனையடையவும் போட்டிகளில் வெற்றி கொள்பவர்களுக்குச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும். வேற்றுமைகள் பல இருப்பினும் தமிழால் உருவான சகோதரத்துவம் கொண்டு ஓர் குடும்பமாய் இவ்விழாவினைச் சிறப்பிக்க வாரீர்!!!

இங்கே பதிவு செய்க

Onspot Registrations Available - நேரடி பதிவுகள் வரவேற்கப்படும்

இங்கே பதிவு செய்க

Onspot Registrations Available

நேரடி பதிவுகள் வரவேற்கப்படும்

ஐப்பசி 10,11

அக்டோபர் 27 மற்றும் 28

ஐப்பசி 10,11

அக்டோபர் 27 மற்றும் 28

  நாட்கள் :    மணி :
    நிமிடங்கள் :    வினாடிகள்
நிகழ்வின் இடம்
google-maps

அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி,
தடாகம் சாலை,
கோயம்புத்தூர், தமிழ்நாடு - 641013,

எங்களை பின்தொடர

@tmfa_gct

GCTManavarMandram

@tmfa_gct

GCTManavarMandram

குழு நிகழ்வுகள்

...
குழு மௌன நாடகம்

வார்த்தைகள் இல்லாமல், வசனங்கள் பேசாமல், ஒலிகள் எழுப்பாமல், வண்ணமயமான வாழ்க்கையை, மௌனம் எனும் தூரிகைக் கொண்டு வரைந்திடுவீர். நவரசத்தினை கண்களிலும் உவமைகளை உதடுகளிலும் கருத்துகளை கை கால் அசைவுகளிலும் வெளிப்படுத்த வாரீர்

...
கிராமிய நடனம்

மானிடராய் பிறந்த செம்மையான மண்ணின் மாண்புமிகு கலைகளைக் கற்றுத் தேர்ந்து, காண்போரின் கண்களில் உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்து, மழைநேரத்து மயில்கள் வானவில்லாக உருவெடுத்து இதுவல்லவோ எம் மண்ணின் பாரம்பரியம் என தன் எழிலால் வியப்பில் ஆழ்த்திடும் ஓர் ஆட்டம்

...
தெருக்கூத்து

கூத்து எனும் வாளிக்குள் செய்தி எனும் சாயத்தை ஊற்றி வெளுத்துப்போன மக்களின் மனதில் வண்ணச்சாயத்தை பூசி பாமர மக்கள் மனதில் வண்ணமயமான செய்திகளைப் புகுத்தி பாரெங்கும் ஒலித்து நற்கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்திடுவோம்!!

...
வில்லுப்பாட்டு

இறைவனை இசைக்க வில்லெடுத்து, வண்ணத்தூரிகைகளால் வார்த்தைகளைக் கோர்த்து, நயனத்தின் இசையால் மிளிர வைத்து, கடம் போல் வடம் கட்டி, கஞ்சிரத்தின் நவீன ஓசையால் புத்தம் புது கருத்துக்களைக் கொண்டு மாற்றுவோம் இவ்வுலகையே

தனிநபர் நிகழ்வுகள்

தனிநபர் நாடகம்
தனிநபர் மெளன மொழி நாடகம்
தமிழ் வினாடி வினா
திரைப்பட வினாடி வினா
விளையாட்டு வினாடி வினா
கலக்கப் போவது யாரு
சகலகலா வல்லவன்
கவிதை
பேச்சுப் போட்டி
Hand Painting
Solo Singing
Paper Dressing
Pebble Art
No Glue! No Tape!
Shades of Grey
Caricature Chronicles
Solo Dance
Dumb - C

விதிமுறைகள்

    • பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி அடையாள அட்டையைக் கொண்டு வருதல் அவசியம்.
    • போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே தங்களின் பெயரையோ அல்லது அணியின் பெயரையோ பதிவு செய்திருத்தல் அவசியம்.
    • ஒன்றுக்கு மேற்பட்டபோட்டிகளில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் நேர மேலாண்மையைத் தங்களுக்குத் தகுந்தவாறு பயன்படுத்திக்கொள் வேண்டும்.
    • கல்லூரி மற்றும் விடுதிக்குள் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத பட்சத்தில் கல்லூரி எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்.
    • அவைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்தல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
    • அனைத்துப்போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
    • சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் போட்டிகளின் நேரம் மாற்றப்படலாம்.
    • போட்டியாளர்களின் உடைமைகளுக்கு, கல்லூரிநிர்வாகம் பொறுப்பேற்காது.
    • போட்டியில் கலந்துகொள்ள பங்கேற்பாளர் அடையாள அட்டை அவசியம்.

கால அட்டவணை

நாள் 1 - 27/10/2023

இயற்றமிழ்

நேரம் போட்டி இடம்
09.00 AM - 10.00 AM வண்ணம் பூசாத ஓவியம் (தமிழ் வினாடிவினா) அறை எண்: 112
10.00 AM - 11.00 AM கானல் வெண்ணிலா (கவிதை) அறை எண்: 134
11.00 AM - 12.00 PM சாயம் பூசும் வெண்ணிலா (விளையாட்டு வினாடிவினா) அறை எண்: 231
01.30 PM - 02.30 PM செவ்விதழ் மொழி (பேச்சுப்போட்டி) அறை எண்: 231
02.30 PM - 03.30 PM திரைச்சுடர் வெண்பா (திரைப்பட வினாடிவினா) அறை எண்: 112

இசைத்தமிழ்

நேரம் போட்டி இடம்
1.30 PM - 4.00 PM Solo Singing Production Seminar Hall

நாடகத்தமிழ்

நேரம் போட்டி இடம்
09.00 AM -12.30 PM Solo Dance அறை எண்: 251
10.00 AM -11.30 AM மௌன நாயகர்கள் (தனிநபர் மௌன நாடகம்) அறை எண்: 129
11.00 AM - 1.00 PM வானவில் வித்கர் (தனிநபர் நாடகம்) அறை எண்: 123
12.00 PM - 1.00 PM சாயப்பட்டறை (சகலகலா வல்லவர்கள்) அறை எண்: 215
1:30 PM - 3:00 PM வண்ண ஜாலத்தின் வண்ணம் யார் (கலக்கப்போவது யாரு) அறை எண்: 156
1.30 PM நிறமற்ற நிசப்தம் (மௌனமொழி நாடகம்) Main Audi
3.10 PM மழைநேரத்து மயில்கள் (கிராமிய நடனம்) Main Audi

சித்திரத்தமிழ்

நேரம் போட்டி இடம்
09.00 AM - 10.30 AM கரங்களின் தூரிகை (Hand painting) அறை எண்: 171
11.00 AM - 12.30 PM எண்ணங்களின் வண்ணம் (No glue No tape) அறை எண்: 169
01.45 PM - 03.45 PM வெண்காகிதவுடை (Paper Dressing) Open Audi
03.00 PM - 04.30 PM வண்ண வருணனை (Caricature) அறை எண்: 169

நாள் 2 - 28/10/2023

இயற்றமிழ்

நேரம் போட்டி இடம்
09.00 AM - 09.30 AM வண்ணம் பூசாத ஓவியம் (தமிழ் வினாடிவினா - இறுதிச்சுற்று) CSE Seminar hall
09.45 AM - 10.15 AM சாயம் பூசும் வெண்ணிலா (விளையாட்டு வினாடிவினா - இறுதிச்சுற்று) Production Seminar hall
10.30 AM - 11.00 AM திரைச்சுடர் வெண்பா (திரைப்பட வினாடிவினா - இறுதிச்சுற்று) IT seminar hall

இசைத்தமிழ்

நேரம் போட்டி இடம்
09.00 AM வண்ணக்குழல் களஞ்சியம் (வில்லுப்பாட்டு) Main Audi

நாடகத்தமிழ்

நேரம் போட்டி இடம்
09.00 AM - 11.00 AM நிலநயங்கள் (DUMB C) அறை எண்: 251
10:50 AM சாயக்கூத்து (தெருக்கூத்து) Open Audi
11.00 AM - 11.30 AM சாயப்பட்டறை (சகலகலா வல்லவர்கள - இறுதிச்சுற்று) CSE Seminar hall

சித்திரத்தமிழ்

நேரம் போட்டி இடம்
09:00 AM - 11:00 AM கருங்காவியம் (Shades of Grey) அறை எண்: 171
09:00 AM - 11:00 AM வண்ண படிமம் (Pebble art) அறை எண்: 169